Wednesday, September 9, 2009

மின்மினி 04

உலகில் காதலிக்கின்ற ஒவ்வொருவரும் தங்கள் காதலை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள்....
சிலர் பூ கொடுப்பார்கள்....
சிலர் பூந்தோட்டமே கொடுப்பார்கள்....
சிலர் கவிதையாகச் சொல்வார்கள்....
சிலர் பார்வைகளால் பரிமாறுவார்கள்....


ஷாஜகான் தன் காதலைச் சொன்னது கல்லறை கட்டி.....
அம்பிகாவதி தன் காதலைச் சொன்னது தனைக் கல்லறையாக்கி...
சீசர் தன் காதலைச் சொன்னது அவளுக்குப் பிடிக்கதவர்களை கல்லறைக்கனுப்பி....

இப்படி காதலும் காலத்திற்கேற்பவும்....காசுக்கேற்பவும் மாறுபடும்.....
ஷாஜகான் தாஜ்மகால் கட்டி தன் காதலை உலகத்துக்கே சொன்னான். அவன் காதல் வரலாறானது.
அவனை விட த்ங்கள் காதலிகளை அதிகமாக நேசித்த சாமனியர்கள் எங்கே போனார்கள்?சரி ஷாஜகான் தன் சொந்தக் காசில் கட்டியிருந்தால் கூட பரவாயில்லை. மன்னன் தொட்டதோமக்கள் வரியில்!
தாஜ்மகாலை ஒரு உலக அதிசயமாக்... மொகலாய கட்டிடச் சொத்தாக மட்டுமே என்னால் அங்கீகரிக்க முடியும்!
அதைக் கட்டுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கலைஞர்கள் அந்த இருபது ஆண்டுகளில் தொலைத்த காதல்கள் எத்தனை?
பல காதல்களை பலியாக்கிய ஒரு கதல் சின்னம்... தாஜ்மகால்!
‍இது என் நிலைப்பாடு மட்டுமே!

நம் விடயத்துக்கு வருவோம்.....

அந்தக் காலக் கட்டத்தில் அதிகமாக சினிமாத்தனங்களுக்குள் அகப்பட்டவர்கலுல் அவனும் ஒருவன்..!
அவன் அந்த வயதிலேயே காதலை அழகாகச் சொன்னவன்! வஅவன் காதலித்ததைக் காதலித்தவர்கள் பல பேர்....


ஏழு மணி வகுப்பு என்றால் 6.30ற்கெல்லாம் ஆஜர். அவள் வரும்வரை காத்திருப்பு.... அதுவும் எந்த திசையில்
வந்தாலும் பார்வை படும்படியான இடத்தில்....! 6.45 மணிக்கெல்லாம் அவனுடன் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்துவிடக் க்
காத்திருப்பு கலகலப்பாகும். அவள் அசைவு தொலைவில் பட்டதுமே குரங்குத்தனமெல்லாம் குடியகல முனிவனின்
அமைதி வந்தமரும். இதழ்களில் ஒரு சிரிப்பு வேறு... சரியாக அவள் இவனைத் தாண்டும் போது, இவன் பெயரை அ....ஆ....
என்ற சுரங்களுடன் நண்பர்கள் உச்சரிக்க... அப்புறமென்ன அவன் ஹீரோ ஆக அவள் கதாநாயகியான புழுகலில் கண்கல் ஒருமுறை மோதிக் கொள்ளும்.. (பத்திகிச்சு..)

வகுப்பு ஆரம்பம் மணி 7.... அவள் எங்கு அமர்ந்திருப்பாலோ அதற்கு சரியாகப் பின்னால் ஆண்கள் இடத்தில் அமர்ன்ந்திருப்பான்! மணி 7.05... பாடம் ஆரம்பமாகும்!
வைத்த கண் வாங்காமல் மனது ஒன்றித்துப் படிப்பான்.. இடியே விழுந்தாலும் அசராமல் அப்படியொரு படிப்பு... கன்லகள் பார்ப்பதை கைகள் அப்படியே எழுதும்.. எழுதுவதெல்லாம் மனதில் உடனேயே பதிந்து போகும். மணி 8.25 படிப்பிகப்பட்டதில் கேள்வி கேட்கப்படும். பாய்ந்தடித்து முதலாவது ஆளாக தலையை ஒளித்துக் கொள்வான்...
பிறகென்ன பாடத்தைப் படித்தால் தானே பதில் சில்ல... அவளைப் படித்தால்.....?

பார்ப்பான்..... பார்த்துக் கொண்டேயிருப்பான் அவளை... அவள் கதுகளை... அவல் அலை பாயும் முடிகளை...
அசிந்தாடும் விழிகலை(கடை)... பேனையோடு விளையாடும் விரல்களை...! பார்பதையெல்லாம் கைகள் எழுதும் கவிதையாக... எழுதியதெல்லாம் மனதில் பதியும் காதலாக...

அவன் பார்வைகளை உள்வாங்கியபடியே அவள் உதடுகள் புன்னகைக்கும்.... ஆரம்பதிலெல்லாம் 'ந‌ற நற' என்று பல்லைக் கடித்தவல் தான் இப்போது புன்னகைகிறாள்... (முதல் படி முன்னேற்ற‌ம்)

மணி 9 வகுப்பு நிறைவு....! அடித்துப் பிடித்து அவசர அவசரமாக கீழிறங்கி நிற்பான், அவள் வரும் வரை! அவள் அவனைத் தாண்டும் போது அவனை விட அமைதியானவனைத் தேடவே முடியாது..! அரை நொடி பார்க்கும் விழிகள் சொல்லப் போவதை அறிவதற்கு அத்தனை ஆவல்...! அவள் மறைந்ததும் தான் தாமதம்.... அப்பாவி அடிமை எவனுடையதாவது சைக்கிள் பறிக்கப்படும். அப்புறமென்ன சுப்பிரமணியபுரம் கண்கள் இரண்டால் பாடல் தான்..!

சைக்கிளில் அவளுக்கு முன்னாலேயே போய் அவள் தெருவில் நின்று ஒரு புன்னகை! புரிந்தும் புரியாதது போல் போகும் அவள் நடை..! ஆரம்பத்தில் இப்படியிருக்க அவனைப் பிடித்துப் போனதும் வீட்டுக்குல் போய் பலகணியில் வந்து, இவன்
நிற்கிறானா போய்விட்டான எனப் பார்ப்பது வரைக்கும் வளர்ந்தது.

அப்பாவி அடிமைகள் சிக்காதவிடத்து.... கால்கள் தான்! ஓடிப்போய் வியர்த்து விறுவிறுத்து நிற்கும் வேளையிலும்
அதே ரொமான்ஸ் புன்னகை..! இந்த வேளைகளில் பாவப்பட்டோ என்னவோ பதில்ப் புன்னகை பெரிதாகக் கிடைக்கும்.
(பதில்ப் புன்னகை பெரிதாகக் கிடைக்கிறது என்பதற்காக சைக்கிளில் பபோவதை நிறுத்தி விட்டான் என்று வாசகர்கள் நினைத்தால்..... தவறு)

.........இன்னும் பயணிப்போம்..................

Tuesday, September 1, 2009

மின்மினி 03

எப்படிப்பட்ட காதலாயிருந்தாலும் யாருடைய காதலாயிருந்தாலும் தன்மானம் என்று வருகின்ற போது ஒரு அளவுக்கு மேல் காதல் என்பது காணாமல் போகும்! பொதுவாகவே ஆணாகட்டும் பெண்ணாகட்டும் அடிப்படையில்
அவரவர் தன்மானத்தை அடுத்தவருக்காய் விட்டுக் கொடுப்பதில்லை! இதில் கவனிக்கப்பட வேண்டியது..... கெஞ்சுதல், இர‌ங்குதல், விட்டுக் கொடுப்புக்கள் எல்லாம் தாண்டி தன்மானம் சுடப்படும் நிலையில் இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்!
ஒருவகையில் காதல் கல்யணங்கள் தோற்பது இதனால் கூடவாக இருக்கலாம்....! அவள் அவனிடம் அல்லது
அவன் அவளிடம் காதலிக்கும் போது ஏதாவதற்காய் கெஞ்சுவது காதல்.......... அன்பின் வெளிப்பாடு! பக்குவப்படாத  பல காதல்களில் கல்யாணத்தின் பின் இந்த கெஞ்சுதல்கள் தன்மானம் சார்ந்த விடயமாகிறது.
ஆரம்பத்தில் இனித்தது கசக்கும் போது தான் பிரச்சினை ஆரம்பாமாகிறது! இவனிடம் நான் கெஞ்சுவதா? பெண் என்றால் அடங்கியா நடக்க வேண்டும் என்று அவளும் இவளிடம் அதுவும் ஒரு பெண்ணிடம் நான் கெஞ்சுவதா? என‌ இவனும் நினைக்கையில் தான் தன்மானம் தலை தூக்குகின்றது....!
காதலுக்கு கண் இல்லையா? (அவசியமான கேள்வி?)
காதலிக்கும் போது செய்த அதே விடயம் கல்யாணத்திற்குப் பின் கசந்து போகும்.
உதாரணமாக...... காதலிக்கும் போது அதிகாலையில் தனது காதலியைப் பார்க்கப் போகிறான் ஒரு காதலன்..(களவாகத் தான்) அவளைப் பார்த்ததும் அவளை கட்டியணைத்து முத்தமிடப் போகிறான்.... உடனே அவள் சொல்கிறாள்  "சீ இன்னும் பல் கூட துலக்கவில்லை....." அவன் சொல்வான் ' பரவயில்லையடி நீ என் செல்லமடி" அவள் சொல்வாள் " கெட்ட பையன் நீ" அவன் சொல்வான் ; என்னைக் கெட்டவன் ஆக்கியதே நீ தானே". இப்படியே உரையாடல் இறுதியாய் உதட்டோடு முடியும்...!
இதே காதலர்கள் கல்யாண‌த்தின் பின் கணவன் மனைவியாய்.....
அதே அவன் கண‌வனாக காலை வேலைக்கு போகப் போகிறான்.... அதே அவள் மனைவியாக அவனுக்கு காலை தேனீர் கொன்டு வருகிறாள்.... பல் துலக்காமல் தான்... தேனீர் வாங்கும் போது அவன் சொல்கிறான்..." என்னடி இன்னும் பல்லு மினுக்கலாய..? நாத்தம் குடல புடுங்குது..." ‍இது எப்படி இருக்கு??
ஆனால் இது தான் யதார்த்தம்....
காதல் என்கிற‌ கனவு உலகில் காதலிப்பது மட்டுமே வேலை.... கனவுலகங்களில் கற்பனைகளோடு மட்டுமே வாழ்க்கை. ஆனால் திருமண‌ம் என்கிற சமூகப் பிணைப்பு காதல் இருளை அகற்றும் போது தான் பிரச்ச்சினை. கனவுலகமும் கற்பனையும் காசு தராவே. காதலில் இருந்த அந்த ஈர்ப்பு கல்யாணத்தின் பின் சில இரவுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம். இதற்கெல்லாம் காரணம் யாரும் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை.. புரிந்து கொள்ள‌ முயற்சிப்பதும் இல்லை... காரணம் காதலின் மயக்கத்திலிருந்து வெளிவர விருப்பமில்லை...! அந்த மயக்கம் கல்யாண யதார்த்தில் தெளியும் போது அந்த யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் காதல்கள் தோற்கின்றன. இந்த யதார்த்தத்ததை புரிந்து கொள்ள பக்குவம் தேவை. அப்ப‌டிப்பட்ட பக்குவக் காதல்கள் தான் அறுபது வயதிலும் " ஐ லவ் யு" சொல்லும்.
இதற்கெல்லாம் இந்த மீசை அரும்பாத காதல் மட்டும் என்ன விதிவிலக்கா?
இவனும் அப்படித் தான்! அவள் விளையாட்டுப் பதில்களும் காரணங்களும் ஒரு எல்லை வரை மட்டுமே அவன் பொறுமையைக் காத்தன. இடையில் இருவரும் வேறு வேறு துறைகளில் பயணிக்க ஆரம்பித்ததில் பார்வைகள் கூட பரிமாற‌ப்படவில்லை. அது முதல் இடைவெளி!
கடைசியாய் இவன் பற்றி அவள் ஏதோ கூற சுடுபட்டு உயிர்த்தது இவன் தன்மானம்...!
அப்படி என்ன சொன்னாளா?
இது தான்... இவன்  தோழி யாரோ இவனுக்காய்ப் போய்ப் பேச வந்தது வினை! எல்லாம் சொல்லி முடித்த தோழி
இறுதியாய் அவள் சொன்னதாகச் சொனாது " நானா அவனை காதலித்தேன்... நானா காதலிக்கச் சொன்னேன்... " காரசாரமான வார்த்தைகள்!
குற்றம் புரிந்தது இருவரும்..... ஆனால் தீர்ப்புகள் எழுதப்பட்டதோ அவள் பக்கம்....! இது நட‌ந்த பின் அவன் சொன்ன வார்த்தைகள்....... "என் வாக்கு மூலங்கலைப் பெற‌‌ முடியாது என்று தெரிந்த கொண்டு... தீர்ப்புக்களை நீயே எழுதிக் கொண்டாய்..... பரவாயில்லை என் வாக்கு மூலங்களைப் பதிவி செய்து உன்னக் குற்றவாளியாக்க நான் விரும்பவில்லை...."
ஆனால் இறுதி வரை அவள் சொன்னதாகச் சொல்லப்பட்டதன் உண்மைத் தன்மை பற்றி அவனுக்கு நம்பிக்கை இருக்கவில்லை... அதன் காரணத்தை இன்னொரு காதல் கதையாகவே எழுதலாம்....!
அதன் பின்பு எழுந்த அவன் தன்மானம் அவனுக்கு பல விடயங்கள் கற்றுத் தந்தன....!
இறுதியாய் அவளுடன் ஒரு முறை பேசியதோடு அந்த பக்குவப்படாத காதல்..அவனை அடுத்த காதலில் பக்குவப்படுத்திய காதல் சுபமாக முடிவடைந்தது!
இன்னும் கூட அவன் அவளைக் கான்பது உண்டு... மெலிதான இரு புன்னகைகள் மோதிக் கொள்வதோடு மட்டும் தான்
அந்த உறவு தொடர்கிறது. இப்போது அவள் வேறொருவனுக்க்ச் சொந்தமாகி விட்டாள் என்பது பெட்டித் தகவல்....!
இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லியேயாக வேண்டும்..... பெண்களைப் பற்றித் தான்.............
பொதுவாக ஒரு பெண்ணுக்கு பள்ளிப் பருவத்தில் பல பேர் விண்ணப்பம் கொடுப்பார்கள்... அப்போதெல்லாம் இருக்கிற நல்ல வாய்ப்புக்களைத் தட்டிக் கழித்துவிட்டு கடைசியாய் சம்பந்தமேயில்லாமல் ஒருத்தனுடன் சேருவார்கள்...
இது பல பேருடைய அனுபவங்கள்....!
இந்தக் காதல் இதோடு முடிந்தாலும்... ஒருவனின் முதல் காதலும்...அதன் நினைவுகளும் எப்போதுமே ஒரு
மண் வாசம்..! நினைவுத் தூற‌ல்கள் தூறும் போதெல்லாம்.... அந்த வாசம் மன‌து  தொடும்!
முதல் காதலை... எப்படி எப்படியெல்லாம் ஒருவன் வெளிப்படுத்துவான்??? ‍இப்படியும் வெளிப்படுத்தலாம் என்று காட்டியது இவன்...
............... இன்னும் பயணிப்போம்......................