Wednesday, August 26, 2009

மின்மினி 02


இவன் முதல் பயணம் சற்று குழப்பமான வித்தியாசமான பயணம்.... தனியாக ஆரம்பித்த பயணம், இடையிடையே நிறுத்ததில் ஒன்றிணைந்து மறுபடி தனியாகப் பயணிக்கும்!ஆரம்பத்திலேயே நிறுத்தத்தில் தேவைப்பட்டது துணை அல்ல பிணை என்று தெரிந்திருந்தால் அவன் தப்பித்திருப்பான்... இது எனது பார்வை!


அவள் தந்த பக்குவம் தான் இன்று இப்படி ஒருத்தியை அடையாளப்படுத்தியது...... இது அவன் பார்வை!
(positive thinking.ஆம்)


பால் போன்ற பதினாறு வயது... சரியாகச் சொன்னால் பத்து பதினோராம் தரம். அந்தக் காலக் கட்டத்தில் அதிகளவு பேசப்பட்ட காதல்களில் அதுவும் ஒன்று! சுப்பிரமணியபுரம்..... கல்லூரி.... நாடோடிகள்... இந்தப் படங்கள் எல்லாம் அவன் காதலைப் பார்த்து பாதிப்படைந்தவை.(விளக்கம் பின்னால்)

அவள் 01 (என்ன 01 என்று முறைப்பா? இவளல்ல நாயகி இருப்பினும் இவளும் அவள் தானே.... முதலில் வந்ததால் 01)


இவள் நாயகி இல்லாதபடியால் அதிகம் இவள் குசலங்கள் தேவையில்லை....ஆனாலும்... அழகாயிருப்பாள் அவள்......அமைதியான ஒரு அழகு....(அமைதிக்குப் பின் ஆபத்து தானே?) அவளைப் பார்த்தால் ஒருவனின் 'அபி'லாஷைகள் எல்லாம் 'தா'னாக அடங்கிப் போகும்....


அவளைப் பார்த்தான்....காதலித்தான்.......


பார்த்ததும் காதலா? என்று சலிக்க வேண்டாம்..! ஒரு பதினாறு வயதுப் பையனிடம் பார்த்ததும் காதலைத் தான் எதிர்பார்க்க முடியும்.... பருவக் கிளர்ச்சியாய்ற்றே.... பக்குவப்பட்ட காதலை எதிர்பார்க்க முடியுமா? முதல் காதல் பக்குவப்பட்டதன் பின் பதியப்படுமானால் உலகில் காதல் தோல்விகளே இல்லாமல் போகும்..!
அவளைப் பார்த்ததும் காதலித்தானே தவிர...தன் காதலை பக்குவமானதாகக் காட்ட அவன் சொன்ன காரணங்கள் பல....


அவளைக் காமத்துடன் பார்க்க மனது வரவில்லை என்பது முதல் காரணம்....(காமம் இல்லாத காதல்.... காதல் அல்ல.... கதைப்போம் இன்னும்)
அவள் அம்மா சொன்னதற்காக கலாசார உடையிலேயே அவள் தரிசனங்கள் தருவதாக யாரோ சொன்ன பெட்டித் தகவல் இன்னொரு காரணம்...
இதுவரை வேறெந்த ஆணிடமும் அடிபணியவில்லை.... எனந்த ஆணையும் அடிபணிய வைக்க முயலவும் இல்லை-அடுத்த காரணம்!


சுருக்கமாக அவன் காதல்.............


அவன் காதலித்தான் அவளை.... அவளுக்கும் தெரியும் காதலிக்கிறான் என்று.... அவளுக்கும் பிடித்திருந்தது அவனை(பிடிக்காமல் போகுமா? காதலித்த விதம் அப்படியே....) முதல் முறை பேசியபோது சம்மதம் சொன்னவள் இரு நாட்களில் மறுப்பு மொழி அனுப்பினாள்... விடுவானா விக்கிரமாதித்தன்? மறுபடி காதல்..... மறுபடி சம்மதம்.... மறுபடி மறுப்பு.... இப்படியாக மூன்று முறைகள்....இரு வருடங்களும் ஓடிவிட்டன...


இவற்றிற்கெல்லாம் அவள் சொன்ன காரணங்கள் அவனாள் நியாயமாக நினைக்கப்பட்டன..! நண்பர்கள்... வீட்டுப் பிரச்சினை..... இது அவள் சொன்ன காரணங்கள்!

(இந்த ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு பெண்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே..அரசியலே ஆடிப் போகும்! ஆண்களுக்கும்
வீட்டுப் பிரச்சினை இருக்கும் என்பதை அடிக்கடி மறந்து போகிறார்கள்... நீங்கள் ஆண்தானே உங்களுக்கென்ன?-என்று மழுப்பல் வேறு! எல்லாவற்றுக்கும் சமவுரிமை கேட்கும் பெண்கள் சில இங்களில் முழு உரிமையையும் தாங்களே எடுத்துக் கொள்ள நினைப்பது என்ன நியாயம்?)


இவனும் அதை எல்லாம் ஏற்றுக் கொண்டான்! ஏற்றுக் கொண்டு அடித்த வசங்கள் இருக்கே... அப்பப்பா...அவன் அடித்த வசனங்களின் சாரம் இது...!
“பரவாயில்லை... நான் படித்து முடிக்கும் வரை பொறுத்தால் போதும்...என் வீட்டில் அனுமதி பெற்று உன்னைப் பெண் கேட்பேன்...
அப்போது கூட நீ சம்மதம் என்று சொல்ல வேண்டாம், என்னைப் பிடித்திருப்பதாக மட்டும் தலை ஆட்டினாலே போதும்” இப்படியெல்லாம் தாங்க முடியாதவசனங்கள்....!




யார் வேண்டுமெண்றாலும் வசனம் பேசல்லம் ஆனால் செயல்.....?முடிவு.....?வழக்கம் போலயத் தான்...

(..... இன்னும் பயணிப்போம்.....)

8 comments:

என்.கே.அஷோக்பரன் said...

அடப்பாவி - 2 வருஷத்தை 2 பந்தியிலேயே முடிச்சா எப்படி? அந்த 2 வருடத்தில் நடந்த நகைச்சுவைகள், வேதனைகள் எல்லாவற்றையுமல்லவா எழுத வேண்டும்.... அபிலாஷைகள் தானாக அடங்கிப்போவது என்ற வரி சிறப்போ சிறப்பு நண்பா!

இன்னும் விளக்கமாக எழுதுக......

வாழ்த்துக்கள்!!!!

என்.கே.அஷோக்பரன் said...

ஆ சொல்ல மற்ந்துட்டன் - போட்டிருக்கிற படமும் மெத்தச் சிறப்பு!!!

Anonymous said...

nice machan

Anonymous said...

nice mchn-yaddarthan

Nimal said...

இப்பிடி சுருக்கமா எல்லாம் விளக்கமில்லாம சொல்லக்கூடாது... விளாவரியா விளக்கவும்...

Anonymous said...

good job bro...

Gajen said...

முதலில் இது இப்படியே போகட்டும் .
பிறகு கிளைக் கதைகளை தனித்தனிப் புத்தகங்களாக எழுதலாம்.

Mukzeeth said...

i am discoeing myself..after readdiinng ur storiess!!!!!!!!!!!

Post a Comment

தங்கள் இனிய கருத்துக்களை, விமர்சனங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.